‘🌸இன்றைய சிந்தனை.. ( 01.04.2018)..
……………………………………………
‘'நம் குழுந்தைகளை''
.........................................
நம் ஏமாற்றங்களுக்குக் காரணம் நம் எதிர்பார்ப்பு கள்தான்.
நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.
எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் மகிழ்சி அடைகிறோம்.. நடைபெறவில்லை என்றால் பிறரை குறை சொல்கிறோம்.
இந்த எதிர்பார்ப்புகள் மாறக்கூடியவை. காலத்தால் அழியக்கூடியவை. அனுபவத்தால் சமரசம் செய்யக்கூடியவை என்பதை உணர்ந்து விட்டால் பல உறவுச் சிக்கல்கள் சீராகிவிடும்.
உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடம் பிரச்சினையா?
உங்களுக்கான அஃபர்மேஷன் இதுதான்:
“ நான் என் பிள்ளைகளைப் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.”
(I release all my expectations about my child..)
“எதிர்பார்ப்பே இல்லை என்றால் அவன் இஷ்டத்துக்குத் தறிகெட்டுப் போகமாட்டானா?” என்று நினைக்கிறீர்களா?
இல்லை! நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியேற்றினால், அவர்களை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் எதிர்பார்ப்பில்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது குழந்தைகள் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயலுவார்கள்.
உங்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.
.
யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?
இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டு போவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.
என்ன படிக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல்பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்தாம்..(expectation).. !
“என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்..,(I accept my child unconditionally) என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும்.
அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்..
ஆம்.,நண்பர்களே.,
உங்கள் குழந்தைகளை எந்தவித எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலர விடுங்கள்..........!🌹🙏🌷
No comments:
Post a Comment